Wednesday 12 September 2012

கேதாரேசுவரர் திருக்கோவில் அமைவிடம் மற்றும் புகைப்படம்

கேதார்நாத் திருக்கோவில் காசியில் அனுமான் படித்துறைக்கு அருகில் உள்ளது.  அனுமான் படித்துறை வரை நாம் காரிலோ ரிக்ஷாவிலோ செல்லலாம்.  சோனார்புரா வரை எல்லா வகையான வண்டிகளும் செல்கின்றன.  அங்கிருந்து நடக்கும் தூரம் தான்.  ஒரு சந்திப்பில் இருபுறமும் சந்துகள் பிரியும்.  தென்புறம் உள்ள சந்தில் காஞ்சி மடத்தின் கோவிலும் வடபுறம் உள்ள சந்தில் கேதார்நாத் கோவிலும் உள்ளன.  நடக்கும் தூரமே.  வாரணாசி டாட் காமிலிருந்து உங்கள் வசதிக்காக கேதார்நாதர் படம் கீழே உள்ளது.  காசிக்குச் செல்பவர்கள் அவசியம் கேதார்நாத் திருக்கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழவேண்டும் என வேண்டுகிறேன்.


Kedareshwar




No comments:

Post a Comment