Wednesday 12 September 2012

திருமெய்யம் கோட்டையும் கோவிலும்

திருமெய்யம் என்னும் அருமையான திருமால் கோவில் அமைவிடம் தமிழகத்தில் உள்ளதுமதுரையிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் திருமெய்யம் எனும் ஊர் உள்ளது.  இங்கு ஒரு குன்று = குன்றின் மேல் ஒரு சிறு கோவில் = குன்றே கோட்டை அமைப்பில் உள்ளது.  குன்றின் உச்சியில் ஒரு பீரங்கியும் புதுக்கோட்டை நகருக்கு வரும் அனைத்துச் சாலைகளும் அருமையாகத் தெரிகின்றன.  இங்கு தான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஒளிந்து இருந்ததாகவும் பின்னர் ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.  பார்க்க வேண்டிய அருமையான கோட்டை அமைப்பு.  மலையின் தென்புறம் அடிவாரத்தில் ஒரு சிவன் கோவிலும் திருமால் கோவிலும் உள்ளது.  அருமையான அற்புதமான குடைவரைக் கோவில்கள்.
இதை வடமொழியாளர்கள் சத்ய சேத்திரம் என்று கூறுவார்கள்.  சத்தியம் என்றால் மெய்.  அதனால் தான் நாம் தமிழில் திருமெய்யம் என்று கூறுகிறோம்.  இங்குள்ள இறைவனின் பெயர் மெய்யப்பன்.  தாயார் பெயர் உய்யவந்த நாச்சியார்.  இத்தலத்தின் பெருமையைச் சிவபெருமான் நாரதரிடம் கூறுவதாக பிரம்மாண்டபுராணத்தில் தகவல் உள்ளது.  இவ்விடத்தில் உள்ள ஊரின் பெயர், இறைப்பெயர், தீர்த்தப் பெயர் போன்று ஆறு வகை முக்கியத்துவம் உள்ளவை மெய் என்ற அடைமொழியாலேயே அழைக்கப்படுகிறது.  இதிலிருந்து இத்தலத்தின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

எட்டெழுத்து மந்திரத்த்ல் துதிக்க வேண்டிய திருத்தலங்களில் இது முதன்மையானது உடனுக்குடன் பலன் தரவல்லது.  புவியிலுள்ள ஆறு, குளம், கிணறு, கடல், அருவி போன்ற ஐவகை தீர்த்தங்கள் தங்கள் பாபத்தைப் போக்கிக்கொள்ள பிரம்மாவிடம் வழிகேட்டபோது திருமெய்யத்தில் உள்ள குளத்தில் குளித்தால் அத்தனை பாபங்களும் போய்விடும் என்று கூறியுள்ளார்.

இங்கே சிரார்த்தம் செய்தால் வடநாட்டிலுள்ள கயா என்னும் இடத்தில் செய்யப்படும் சிரார்த்தத்துக்கு ஈடான பலன் உடனே கிடைக்கும்.  இத்தலத்தின் பெருமைகள் அனுதினம் டாட் ஆர்க் என்னும் வலைத்தளத்தில் திருத்தலங்கள் பற்றி தகவல்கள் தரும் தலைப்பில் அருமையாக படத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.  தகவல்களும் படமும் கீழே உள்ளன.  அனுதினம் டாட் ஆர்க் வலைத்தளத்தை வைட்டிணவன் என்று பெருமைப்படும் ஒவ்வொருவரும் தினமும் படித்து மகிழ வேண்டும்.  அதில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள், தலபுராணங்கள், கோவில் திருவிழாக்கள், கதைகள் என பலவகை இறைக் கருத்துகள் உள்ளன. 

படித்து மகிழ ...  கேட்டு மகிழ .... படங்களைப் பார்த்து மகிழ அருமையான வலைத்தளம் இது.

No comments:

Post a Comment