Monday 27 August 2012

VISHNU MAYA STHOTHRAM-விஷ்ணு மாயா தோத்திரம்


(தேவி மஹாத்மியம், ஐந்தாவது அத்தியாயம் அத உத்தம சரித்திரம். இது மார்க்கண்ட முனிவரால் உலகிற்கு அளிக்கப்பட்டது. விஷ்ணு மாயையான மகாலஷ்மியை தேவர்கள் துதித்த அற்புதத் துதி இதுவாகும்.) 

விஷ்ணு மாயா ஸ்தோத்திரம்

1.
நமோ தேவ்யை மஹாதேவ்யை சிவாயை தைதம் நம :|
நம: ப்ரக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதா: ஸ்மதாம் ||

(
தேவிக்கு வணக்கம். பெருந்தேவிக்கு வணக்கம். எப்போதும் மங்களகரமாய் இருப்பவளுக்கு வணக்கம். இயற்கை வடிவினவளுக்கு வணக்கம். இனிமையானவளுக்கு வணக்கம்.
தேவியே உன்னை நியமப்படி வணங்குகிறோம்.)

2.
ரௌத்ராய நமோ நித்யாயை கௌர்யை தாத்ர்யை நமோ நம:|
ஜ்யோத்ஸ்னாயை சேந்துரூபிண்யை ஸூகாயை ஸததம் நம:||

(
கோப வடிவினவளும் நிலையானவளும் அனைத்தையும் தாங்குபவளும் பாதுகாப்பவளும் ஆகிய தேவிக்கு வணக்கம். நிலவு போன்ற ஒளி வீசும் அழகிய முகத்தை உடையவளும் எப்போதும் ஆனந்தமாக இருப்பவளுமான அன்னைக்கு நமஸ்காரம்.)

3.
கல்யாண்யை ப்ரணதாம் வ்ருத்யை ஸித்யை குர்மோ நமோ நம:|
நைர்ருத்யை பூப்ருதாம் லக்ஷ்ம்யை ஸர்வாண்யை தே நமோ நம:||

(
பணிந்திடுவோர்க்கு எப்போதும் நல்லதையே கொடுப்பவளும் உயர்வான குணங்களை உடையவளும், சித்தியளிப்பவளுமான தேவிக்கு வணக்கம். அலக்ஷ்மி என்கிற மூதேவிக்கும், மண்ணாளும் ஸ்ரீதேவிக்கும், துர்க்கைக்கும் வணக்கம். (அலக்ஷ்மியை வேண்டுவது விலகிச்செல்வதற்காக.) ) 

4.
துர்காயை துர்கபாராயை ஸாராயை ஸர்வ காரிண்யை:|
க்யாத்யை ததைவ கிருஷ்ணாயை தும்ராயை ஸததம் நம:||

(
தடையாக வரும் இன்னல்களைத் தாண்ட உதவும் துர்கைக்கும் எல்லா உயர்வுகளையும் அடையக் காரணமாய் இருப்பவளுக்கும், எல்லாச் செயல்களையும் செய்பவளுக்கும், அனைத்திலும் அறிவாய் வியாபித்து இருப்பவளுக்கும், கருவண்ணம் உடையவளுக்கும், புகை வண்ணத்தினளாய் இருப்பவளுக்கும் வணக்கம்.)

5.
அதி ஸௌம்யாதி ரௌத்ராய நதாஸ் தஸ்யை நமோ நம:|
நமோ ஜகத் ப்ரதிஷ்டாயை தேவ்யை க்ருத்யை நமோ நம:||

(
மிகவும் அழகானவளாகவும், கொடியோர்க்கு மிகவும் கோரமான உருவிலும் காட்சி அளிப்பவளுக்கு வணக்கம். உலகை நிலையாக நிறுத்தியவளுக்கும் செயல் திறனாய் வியாபித்து இருப்பவளுக்கும் வணக்கம்.)

----------------------
இனி வரும் 21 ஸ்லோகங்கள் ஒவ்வொன்றையும் 3 தடவை சொல்ல வேண்டும்.
-----------------------

6.
யாதேவீ ஸர்வபூதேஷூ விஷ்ணு மாயேதி ஸப்ததா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி உயிர்கள் அனைத்திலும் திருமாலின் மாயை என அழைக்கப்படுகிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

7.
யாதேவீ ஸர்வபூதேஷூ சேதநேத்யபிதீயதே:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எல்லா உயிர்களிடத்திலும் உணர்வு என எந்த தேவி அழைக்கப்படுகிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

8.
யாதேவீ ஸர்வபூதேஷூ புத்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எல்லா உயிர்களிடத்திலும் புத்தி வடிவாய் எந்த தேவி நிலைபெற்றிருக்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

9.
யாதேவீ ஸர்வபூதேஷூ நித்ராரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி ப்ராணிகள் அனைத்திலும் நித்திரை உருவாய் அமைந்துள்ளாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

10.
யாதேவீ ஸர்வபூதேஷூ க்ஷீதாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா ஜீவன்களிலும் பசி என்ற உணர்வாய் இருக்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)


11.
யாதேவீ ஸர்வபூதேஷூ சாயாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிரினங்களின் நிழலாகவும் நிலை பெற்றிருக்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

12.
யாதேவீ ஸர்வபூதேஷூ சக்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எவள் உயிர்கள் அனைத்திலும் ஆற்றல் உருவாய் நிலை பெற்றிருக்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

13.
யாதேவீ ஸர்வபூதேஷூ த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி ப்ராணிகள் அனைத்திலும் வேட்கை உருவாய் அமைந்துள்ளாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

14.
யாதேவீ ஸர்வபூதேஷூ க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி உயிர்கள் அனைத்திலும் பொறுமையின் உருவாய் நிற்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

15.
யாதேவீ ஸர்வபூதேஷூ ஜாதிரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிர்களிலும் ஜாதி உருவாய் நிற்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

16.
யாதேவீ ஸர்வபூதேஷூ லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிர்களிலும் ஞானம் என்கின்ற உருவாய் நிற்கிறாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

17.
யாதேவீ ஸர்வபூதேஷூ ஸாந்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிர்களிலும் சாந்தி வடிவினளாய் இருக்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

18.
யாதேவீ ஸர்வபூதேஷூ ஸ்ரத்தாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிர்களிலும் அக்கறை உருவத்தில் நிலைபெற்று இருக்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

19.
யாதேவீ ஸர்வபூதேஷூ காந்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிர்களிலும் விளங்கும் ஒளிப்பிழம்பாய் நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)



20.
யாதேவீ ஸர்வபூதேஷூ லக்ஷ்மிரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிர்களிலும் மங்கள வடிவாய் அமைந்துள்ளாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

21.
யாதேவீ ஸர்வபூதேஷூ வ்ருத்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிர்களிலும் செயல் வடிவாய் நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

22.
யாதேவீ ஸர்வபூதேஷூ ஸம்ருதிரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிர்களிலும் நினைவு உருவாய் நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

23.
யாதேவீ ஸர்வபூதேஷூ தயாரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிர்களிலும் இரக்கம் என்கின்ற ஊற்றாய் இருகின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

24.
யாதேவீ ஸர்வபூதேஷூ துஷ்டிரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிர்களிலும் திருப்தி என்கின்ற உருவாய் இருகின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

25.
யாதேவீ ஸர்வபூதேஷூ மாத்ரூரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிர்களிலும் அன்னை உருவாய் இருகின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

26.
யாதேவீ ஸர்வபூதேஷூ ப்ராந்திரூபேண ஸம்ஸ்திதா:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||

(
எந்த தேவி எல்லா உயிர்களிலும் மருள் உருக்கொண்டு இருகின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

27.
இந்த்ரியாணா மதிஷ்டாத்ரி பூதானாம் சாகிலே ஷூயா:|
பூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்த்யை தேவ்யை நமோ நம:||

(
இந்த்ரியங்களுக்கும் தலைமையில் நின்று எவள் உயிரினங்கள் அனைத்திலும் ஊடுருவி எப்பொழுதும் எங்கும் எல்லாமுமான சக்தியாய் நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

28.
சிதி ரூபேண யா க்ருத்ஸ்னம் ஏதத்வ்யாப்ய ஸ்திதா ஜகத்:|
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:||
(
உணர்வு உருவாய் நின்று எவள் அகிலம் முழுவதும் வியாபித்து நிற்கின்றாளோ, அவளுக்கு வணக்கம், வணக்கம், வணக்கம்!)

பலச்சுருதி (பலன்கள்)
-----------------------------
29.
ஸ்துதா ஸூரை: பூர்வ மபீஷ்ட ஸம்ஸச்சாத் ததா ஸூரந்த்ரேண தினேஷூ ஸேவிதா :|
கரோது ஸா ந: ஸூபஹேதுரீஸ்வரி ஸூபானி பத்ராண்ய பிஹந்து சாபத:||

(
முன்பு மனோரதம் ஈடேற தேவர்களால் துதிக்கப்பட்டு, பின்னர் அவ்வாறே வானவர் வேந்தனால் தினந்தோறும் தொழப்பட்ட அந்த இறைவிதான், நன்மைகள் அபைத்துக்கும் காரணமானவள். அவள் நமக்கு சுபங்களையும், மங்களங்களையும், ஏற்படுத்தட்டும். ஆபத்துக்களை அழிக்கட்டும்.)

30.
யா ஸாம்ப்ரதம் ஸோத்தத தைத்ய தாபிதை: அஸ்மாபிபிரீஸா ச ஸூரைர் நமஸ்யதே:|
யா ச ஸ்ம்ருதா தத்க்ஷணவே மேவ ஹந்திந: ஸர்வாபதோ பக்தி விநம்ர மூர்த்திபி:||

(
வீறுகொண்ட அசுரர்களால் அல்லல் பட்ட தேவர்கூட்டம் இறைவியைப் பணிந்தது. பணிந்தவரைக் காத்திட்டாள் தேவி. நாமும் ஆபத்துக் காலங்களில் பக்தியால் நெக்குருகி பணிந்து இறைவியை நினைத்தால், அக்கணமே அவள் நம் ஆபத்துக்களையெல்லாம் தொலைத்து நம்மைக் காப்பாள்.)

------



No comments:

Post a Comment