Monday 27 August 2012



நான் இன்று http://anudinam.org/ என ஒரு வலைத்தளத்தில் பாதுகா சஹஸ்ரம் பாடல்கள்   பதிவுகளைக் கண்டேன்.  மிக அருமையாக விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.  இறைவனின் இணையடிகளின் படங்களும் மிக நன்றாக இருந்தது.  நீங்களும் இந்த வலைத் தளத்தைக் கண்டு களிக்கலாம்.  மிக அருமையான தளம் இது.  இறை உணர்வு உள்ளவர்கள் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள பல தகவல்கள் இந்த தளத்திலே உள்ளன.

பாதுகா சஹஸ்ரம்  = பாடல் 27




27. ஸ கைடப தமோ ரவி: மது பராக ஜஞ்ஜ்ஜா மருத்
ஹரிண்ய கிரி தாரண: த்ருடித காலநேமி த்ரும:
கிம் அத்ர பஹுநா பஜத் பவ பயோதி முஷ்டிந்தய:
த்ரிவிக்ரம பவத்க்ரம: க்ஷிபது மங்க்ஷு ரங்கத்விஷ:
sa KaiDabha tamO ravir MadhupAraka janjacch-jAmaruth
HiraNya giri dhAraNas-thruDitha KaalanEmi dhruma:
kimathra BahunA bhajath bhava payOdhi mushDindhaya:
Thrivikrama bhavathkrama: kshipathu mangshu Rangadhvisha:
பொருள்–மூன்று அடியால் உலகத்தை அளந்தவனே! ஸ்ரீரங்கநாதா! கைடபன் என்னும் இருளை நீக்கவல்ல சூரியனாக நின்றாய். மது என்னும் அசுர புழுதியை விரட்டவல்ல புயல் காற்றாக நின்றாய். ஹிரண்யன் என்னும் அசுர மலையைப் பிளந்தாய். காலநேமி என்னும் அசுர மரத்தை முறித்தாய். இப்படியாக எதற்குச் சொல்லிக் கொண்டே போகவேண்டும்? சுருக்கமாகவே கூறுகிறேன். உன்னுடைய இந்தச் செயல்கள் அனைத்தும், ஸம்ஸாரம் என்னும் கடலை உறிஞ்சி வற்ற வைப்பதாகும். இப்படிப்பட்ட உனது செயல்கள் கொண்டு, திருவரங்கத்தில் உன்னை அனுபவிக்க இயலாமல் தடுக்கின்ற விரோதிகளை அழிப்பாயாக.
நன்றி   http://anudinam.org/  வலைத்தளம்.


No comments:

Post a Comment