Monday 27 August 2012

குருமார்களுக்கும் அவனே குருThree Lions-Four foxes-five elephants


அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை எனும் வள்ளுவனின்
வாக்கை நாம் மறக்கலாகுமோ ? அந்த அருள் வேண்டின்
பொருள் மேல் உள்ள ஆசைதனை விட்டிட வேண்டும். குறைந்த பட்சம்
நமக்குத் தேவையில்லாதவற்றின்பால் உண்டாகும் ஆசைதனை விட்டொழியவேண்டும்.

மூன்று சிங்கங்கள் !!!
நான்கு நரிக்குட்டிகள் !!!!
ஐந்து ஆனைக்குட்டிகள் ! ! ! ! !

திகைத்து நீங்கள் நிற்பது நன்றாகவே தெரிகிறது. நீங்களா திகைக்கின்றீர்கள். உங்கள் சிந்தை அல்லவா
திகைத்து நிற்கிறது.


திருமந்திரத்தின் 2214 வது பாடல் என்ன சொல்கிறது பார்ப்போமா ?

"
திகைக்கின்ற சிந்தையும் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே."

சிந்தைதனை சிதற விடாமல் காப்பது சாதாரணமா என்ன ?
"
சென்றவிடத்தாற் செலவிடாது தீதொறி
நன்றின்பால் உய்ப்பது அறிவு " எனவோ கூறினார் வள்ளுவர்.

அந்த அறிவைப் பயன்படுத்தி இது நன்மை, இது தீமை எனப் பிரித்து அறிய இயலாதோர் மனந்தனில்
மூன்று சிங்கங்கள் (அதுவும் பசி வேகத்தில் ) குடி இருக்குமாம். அவை என்ன ? காமம், வெகுளி, மயக்கம்
என்ற கொடிய விலங்குகள் தான் அவை.
அவற்றைக் கூண்டில் அடைக்கவேண்டாமா? ஆனால் அதற்கு தடையாக நான்கு நரிக்குட்டிகள் இங்குமங்கும்
நம்மை ( நம் சிந்தையை ) சிதறடித்து விடுகின்றன். அவை நமது அந்தக்கரணங்களே. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் நான்கு நரிகள் வஞ்சகமாய் ( நமக்கு மகிழ்ச்சி தருவது போன்ற ஒரு பிரமையை உண்டுபடுத்தி) விடயங்களை நம்மைப் பற்ற வைக்கின்றன். அது சரி, இந்த ஐந்து ஆனைக்கன்றுகள் யாவை? நமது ஐந்து புலன்கள்தாம். இந்த நரிகள், ஆனைக்கன்றுகள் மூலமாக சதி செய்து ( conspiracy ) நம்மை சிங்கங்களுக்கு
இரையாக்கிவிடுகின்றன்.

இதிலிருந்து தப்ப ஒரே வழி என்ன?
சித்தத்தை சிவன் பாலே வைய்யுங்கள்.
அவன் நம் இதயத்திலே சோதி வடிவில் இருக்கிறான் என உறுதியுடன் நம்பி அதே எண்ணத்தில் நிலை பெறுங்கள்.
மனம் அமைதி பெறும். நல்லது எது தீயது எது என்ற தெளிவு ஏற்படுவது திண்ணம்.
இந்தத் தெளிவு ஏற்பட்ட பின், ஐம்புலன்களை நமக்கு அடிமையாக்குங்கள். யானையை அடக்க அங்குசம் தேவை. ஏகாக்ர சித்தம் ( concentrated thought on single point ) இந்த அங்குசமாகப் பயன்படும்.
புலன்களை அடக்கி விடின், நரிகள் இடைஞ்சல் செய்வது நன்றாகவே புலப்படும்.


அந்த நரிகளை விரட்ட, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவைகள் தூய்மைப்படுதல் அவசியம்.
மனம் என்பது சீவன் மேல் போர்த்தப்பட்ட ஆவரணம். இதில் " நான் " எனும் உணர்வு ஒரு வைரஸ் போல
ஒட்டியிருக்கும். அந்த கிருமி தனை ஒழிக்க ஒரு நாசினி தேவை. நாசினி ஓங்கிய அறிவு ( higher intellect )
தான். ஓங்கிய அறிவின் விளைவு புத்தி தன் வசம் ஏற்படும். புத்தி வசமான பிறகு மூன்று சிங்கங்களை அடக்குவது அல்லது கூண்டில் அடைப்பது கடினமா என்ன ?

காமம் என்பது வெறும் ஆசை அல்ல. நமக்குச் சேரவொண்ணாதவைகளின் பால் நமக்கு ஏற்படும் ஒரு வெறி.
பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை மூன்றுமெ இதில் அடங்கும்.
நாம் எவை வேண்டும் என நினைக்கிறோமோ, அவற்றினை வைத்திருப்போர் மேல் நமக்கு ஏற்படும் பொறாமை, நமக்கு கிடைக்கவில்லையே என்ற நிலையில் ( frustration ) எழுகின்ற கோபம். கோபத்தினால் உண்டாகும்
மயக்க நிலை . அமைதி குலைந்த நிலை. ஆவேசம் கொண்ட நிலை. எதைச்செய்தாவது பெறவேண்டும் என்ற நிலை. இது மனம் அழுகிப்போன நிலை.

அழுகிய மனது ஒரு புற்று நோயாம். புற்று நோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டாமா?புற்று நோய் வந்தவுடன் கவலைப்படுவதில் என்ன லாபம்?

புற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள எனக்கு ஒரு வழிதான் தெரிகிறது.
அதையும் வள்ளுவரே சொல்வார்.

"
பற்றுக பற்றற்றான் பற்றினை ‍- அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு "


இன்னமுமா சொல்லவேண்டும். இல்லை. ஆனால் செய்யவேண்டும். என்ன செய்வது?
முதற்கண்.
சும்மா இரு.
சொல்லற.

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் ‍ மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து ......திருவள்ளுவர்.


எதை எண்ணிடினும் உயர்வாகவே நினை என்றார் வள்ளுவர். மற்ற எண்ணம் எதனை விட்டபோதிலும்
உயர்வாகவே எண்ணவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விடாது இரு என்பார்.

இது எப்படி சாத்தியம் ? உயர்வாக எண்ணுதல் மனத்தின்பாற் பட்டது. மனம் தெளிவுற, மாசற்றதாக‌
இருப்பின் மட்டுமே ஒருவன் உயர்வாக எண்ணுதல் சாத்தியம்.


எண்ணங்கள் தாம் எல்லாவற்றிற்கும் அடிப்படை. இந்த எண்ணங்கள் மாசற்று இருப்பின் நமது சொற்களும் செயல்களும் தாமாகவே மாசற்றதாக மட்டுமன்றி நமக்கும் மற்றோருக்கும் நன்மை பயக்க வல்லதாக அமையும்.

ஆகவே, வள்ளூவர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல்  அனைத்து அறன்
ஆகுல நீர பிற.


என ஒருவனுடைய மனம் மாசற்று தூய்மையாய் இருப்பின் அதுவே எல்லா அறமும்.
மற்றவை எல்லா அறவெழிக் கருமங்கள் என சொல்லப்படும் அனைத்துமே மனத்தூய்மைக்கு
எதிரில் நீர்த்துப் போனவை ஆகும் என்பார்.


மனம் தூய்மையாவதற்கு என்ன செய்தல் வேண்டும்?
முதல் வழி வாய்மை.

"
வாய்மை எனப்படுவது யாதெனின்  யாதொன்றும்
தீமை இலாத சொலல் "
என்றார்.

மறுபடியும் "சொலல்" எனச் சொல்லி சொற்களின் சிறப்பை நினைவூட்டுகிறார்.
ஆக, நம் வாய் வழி வரும் வார்த்தைகள் மீது மிக கவனமாக இருத்தல் வேண்டும்.
ஏன், எனின் சொல்லாத சொல்லுக்கு நாம் எஜமான்.
சொல்லை சொல்லிவிட்டாலோ, சொல்லிய சொல் நமக்கு எஜமான்.
அப்போது, ஒரு சொல்லை சொல்ல முயல்கையில் என்ன செய்தல் வேண்டும் ?

"
தன்னெஞ்சு அறிவது பொய்யற்க " என்றார்.

எதை நாம் பொய் அன்று நமது மனச்சாட்சி உணர்கிறதோ அதை சொல்லாதே ! என்றார்.
அறவழிக்கு அடிப்படையே நமது மனச்சாட்சிக்கு முதன்மை கொடுப்பது தான்.
அப்படிப்பட்ட மனதை தீய வழிகள் பால் செல்லவிடாது, நன்றின் பால் உய்ப்பது முதல் வழி.

"
சென்ற விடத்தாற் செலவிடாது தீதொறி
நன்றின் பால் உய்ப்பது அறிவு."


இந்த நுண்ணிய அறிவு, (தீது எது நன்மை பயப்பது எது என சீர்தூக்கி ப்பார்த்து நன்மைபால் மனதை ஒழுங்குபடுத்துவது) மானிட வர்க்கத்திற்கு இன்றியமையாததாகும்.
இந்த அறிவு தான் அற நெறியில் மனிதனை நடத்திச் செல்ல இயல்புடையதாகும்.
இந்த அறிவினைக் கொண்டவன் புகழைத் தேடிச் செல்ல அவசியமில்லை.
அவனை புகழ் தானே வந்தடையும்.
இந்த அறிவினைப் பெற நாம் கடைபிடிக்கவேண்டிய ஒரே வழி:

எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

என்ற வள்ளுவரின் பொய்யாமொழிதனை
நாள் தோறும் நினைவில் நிலை நிறுத்துவோம்

" பரியினும் ஆகாவாம் பால அல்ல ; உய்த்துச்
சொரியினும் போகா தம. " ( அறம் ‍
38 ‍ 6 )

நமக்கு (ஊழினால்) உரிமை இல்லாதவற்றினை எத்தனைதான் வருந்திக்காத்தாலும், அவை
நம்மைவிட்டு நீங்கும். (அதே சமயம்) நமக்கு எவை நமக்கு உரியதோ அவை நாம் வேண்டாம் என த்தள்ளி விடினும் நம்மை விட்டு நீங்கா.

நீதி என்ன? எது நாம் நமது அறிவு, உடல் முயற்சியினால் ஈட்டுகின்றோமோ, அது நம்மிடம் நிலைத்து நிற்கும். மற்றவை நம்மை விட்டு நீங்கிவிடும்.

நம்மிடம் நிலைத்து நிற்பதாகக் காணப்படும் செல்வத்தையே நாம் ஊழ்வினைகளுக்குட் பட்டுத்தான் அனுபவிக்க இயலும்.

வள்ளுவர் கூறுவார்:

"
வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது " ( அறம்
38 7 )

எவ்வளவு தான் ஒருவன் கோடிக்கணக்கில் செல்வத்தைச் சேர்த்து வைப்பினும், இறைவன்
நமக்கு எவ்வளவு என வகுத்து வைத்துள்ளானோ அந்த அளவு தான் அந்த செல்வத்தினை
அனுபவிக்க இயலும்.

வள்ளுவப்பெருந்தகை நியாயமான வழிகளில் பொருள் ஈட்டவேண்டிய அவசியத்தை
வற்புறுத்திக் கூறுகிறார்.

இன்றைய உலக வணிக சந்தையிலே வள்ளுவனின் நீதிக்குரல் கேட்கப்படுகிறதா? எல்லாத்துறைகளுமே வணிகமாகிவிட்டன. உலகத்தில், ஏன் ? புண்ணிய பூமி என நாம் சொல்லிக்கொள்ளும் பாரத நாட்டிலேயே, எல்லாவற்றிலேயும், அதர்ம வியாபார வழிகள் நுழை ந்து விட்டன என்பதைச் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

இதிலிருந்து வெளிவர வழி இருக்கிறதா ? வெளிச்சம் ஏதேனும் தெரிகிறதா ?


நமது மனதிலே ஏற்படும் அறவழிக்கு அப்பாற்பட்ட எண்ணங்கள், அந்த எண்ணங்களால்
உந்தப்படும் பேச்சுக்கள், செயல்கள் தான் அசுரர் ஆவர்.

சூரபத்மன் வேலனால் கொல்லப்படுவது போல, மனதின் பாற்‌எழும் தீய‌ எண்ணங்கள்
முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும்.

இன்று "திருமந்திரத்தில்" உள்ள 2335 வது பாட்டினைப் படிப்போமா?

"
இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லது உள்ளது மாயன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடில் தூராத் தூரமென்
றெல்லை யுணர்ந்தால் உயிர்க்குயிராமே...."


உளதன்றி இலதன்று

இறைவன் எல்லா இடங்களிலும் எப்பொருள்களிலும் நீக்கமின்றி உள்ளவனாய் இருக்கின்றான். இன்ப துன்மங்கட்கு வேறாகி இல்லாதவனாக திகழ்கிறான்.

பிரணவமே ஐந்தெழுத்து.

அகாரம் உயிரே; உகாரம் பரமே
மகாரம் மலமாய் வரும் முப்பதத்தில்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமா
யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே
.
திருமந்திரத்தில் வரும் 975 வது பாடல் இதுவாம்.
This is the 975 th Song in THIRUMANDHIRAM recited by Thirumular.

பிரணவம் 'அ" உயிராயும், "உ" பரமாயும், "ம" மலமாயும், இவ்வாறு மூன்று பதங்களில் வரும். "சி" சிவமாய், "வ" வடிவுடைய சக்தியாய், "ய" உயிராயும் சொல்லலும் ஆகும்.

பிரணவம் என்பதிலும், ஐந்தெழுத்திலும், சிவன் விளங்கும் வழி முறை இதில் கூறப்பற்றிருக்கிறது
உதாரணமாக, ஒருவருக்கு பார்வை மங்கியிருந்தால், அவர், தான் காணும் நிறங்களை சரிவர கூற முடியுமா? கரும் பச்சையை கருப்பு என்றோ பச்சை என்று அவர் சொன்னால் அவர் பொய் சொல்கிறார் எனக்கூறலாமா?
A person whose vision is blurred can describe a dark blue as black. Is it that this person lies?

அதேபோல், ஒருவருக்கு ஒரு பொருளினைப்பற்றி ஒன்றுமே தெரியாதபோது, அதை திடீரென காண்கையில், அதை அவரால் சரிவர விவரிக்க இயலாது. அப்போதும் அவர் பொய் கூறுகிறார் எனச்சொல்ல இயலாது.
In the same way, when a person does not have any apriori knowledge of a particular thing, he may not be able to describe of the thing he sees. Then also, it is not correct to say that the person lies.

ஆக, உண்மை, பொய் இரண்டுமே அவரவர் உணர்ந்து உள்வாங்கிக்கொண்ட நிலையின் அடிப்படையிலேதான் உள்ளன்.
Truth and Falsehood are therefore based on the physical and mental perceptions of the concerned individuals.

ஆனால், இவ‌ற்றைத்த‌விர‌, ம‌ற்றொரு கோண‌த்திலும் பொய், உண்மைத‌னை ஆராய‌லாம்.
Apart from this we can approach the subject of truth and falsehood from a different angle and approach
.Let us hear what
Bharathi sing:

பாட்டுக்கொரு புல‌வ‌ன் பார‌தி பாடுவ‌தைக்கேட்போம்:

" நிற்ப‌துவே, ந‌ட‌ப்ப‌துவே, ப‌ற‌ப்ப‌துவே
.அத்த‌னையும் சொப்ப‌ன‌ந்தான்
..
"All standing,walking flying ...all just dreams !"

சொப்ப‌ன‌ம் என்றால் க‌ன‌வு, க‌ன‌வு என்றால் அது உண்மையில்லாத‌து. நாம் நிற்கிறோம், ந‌ட‌க்கிறோம், விமான‌ங்க‌ளில் ப‌ற‌க்கிறோம், ப‌ற‌வைக‌ள் ப‌ற‌க்கின்ற‌ன. இவ‌ற்றை எல்லாவ‌ற்றையுமே உண‌ர்கிறோம். இவ‌ற்றை எப்ப‌டி உண்மை யில்லை என்று சொல்ல‌முடியும்? இருப்பினும், எது அழிய‌க்கூடிய‌தோ அது உண்மையில்லை. இது த‌த்துவ‌ அணுகுமுறை.

In the perception of Bharathi, the Tamil Poet, whatever is transient, is also not true. This is a philosophical approach.

வ‌ள்ளுவ‌ர் கூறுவார்:

த‌ன் நெஞ்சு அறிவது பொய்ய‌ற்க‌ ; பொய்த்த‌பின்
த‌ன் நெஞ்சே த‌ன்னைச்சுடும்.

Having known the truth, never say what is false (untrue), as your own mind indicts you.

மெய்த‌னை அறிந்த‌பின்னும், மெய்யில்லாவ‌ற்றைச் சொல்வ‌தே பொய். அப்ப‌டி சொல்லும்போது ந‌ம‌து ம‌ன‌மே ந‌ம்மை காய்கிற‌து. சுடுகிற‌து.

அவ்வாறு சுடுகிறதா? ந‌ம‌க்கு நாமே ப‌தில் சொல்லிக்கொள்வோம்.
Do we get indicted when we tell a lie. Let us reflect.
மற்றும், "ம‌ன‌த்துக்க‌ண் மாசில‌ன் ஆத‌ல், அனைத்து அற‌ன்" என‌வும் குறிப்பிடுகிறார். (Righteousness springs from a mindset rid of all dirts)

ஆக‌, அற‌ம் என்ப‌து "இதுவ‌ல்ல‌" என‌ச் சில‌ தீய‌ குண‌ங்க‌ளைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், அற‌ம் என்றால் இதுதான் என‌ எங்கே சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து ?

அற‌ நெறிச்சார‌ம் என்ற‌ ப‌ண்டைய‌ நூலில், அறத்தின் வ‌ழியாய் அமையும் ப‌த்து ப‌ண்புக‌ள் யாவை என‌ அழ‌காக‌ தொகுத்து த‌ரப்ப‌ட்டுள்ள‌து.

பார்ப்போமா?

"மெய்ம்மை, பொறையுடைமை, மேன்மை, த‌வ‌ம், அட‌க்க‌ம்,
செம்மை, ஒன்று இன்மை, துற‌வுடைமை,
ந‌ன்மை,திற‌ம்பா விர‌த‌ம் த‌ரித்த‌லோடு -
இன்ன‌அற‌ம் ப‌த்தும் ஆன்ற‌ குண‌ம்."


உண்மை பேசுத‌ல்,(Truthful words) பொறுமை காத்த‌ல்,(patience) பெருமைப‌ட‌ வாழ்த‌ல் (magnanimity), த‌வ‌ம் (penance), அட‌க்க‌ம் (humility), ந‌டு நிலைமை, (unbiased judgmental level)த‌ன‌க்கென‌ ஒன்றும் வைத்துக்கொள்ளாது பொது ந‌ன்மைக்காக‌வே உழைத்து ஈட்டிய‌ பொருளை செல‌விடுத‌ல்,(not to keep even one's wealth for personal gains but to spend it for welfare of community) எதிலும் ப‌ற்று இலாது இருத்த்ல்,(detachment) ந‌ல்ல‌ன‌ எதுவோ அதை துணிந்து செய்த‌ல்,(to steer to do what one feels as right), த‌ன் நிலைகள், கொள்கைக‌ள் யாவ‌ற்றையும் காலத்திற்கேட்ப, மாற்றாது க‌டைப்பிடித்த‌ல்,(to stick to one's own principles,even during adversity), இவை தான் அறம் .

ஐநூறு ஆண்டுக‌ட்கு முன்னே சொல்ல‌ப்பட்ட‌து இது.

இன்றைய‌ கால‌ ந‌டைமுறைக்கு, அர‌சிய‌ல், பொருளாதார‌ வாழ்விற்கு ஒத்து வ‌ருமா என‌ ந‌ம‌க்கு ஐய‌ம் ஏற்ப‌டுவ‌து இய‌ற்கையே.


மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து
பின்னை அறிவென் என்ற்ல் பேதைமை
‍‍ தன்னைத் துணித்தானும் தூங்காது அறம் செய்க ! கூற்ற‌ம்
அணித்தாய் வருதலும் உண்டு."

வள்ளுவர் கூறுவார்:

"
நாச்செற்று விக்குள் மேல் வாராமுன்,
நல்வினை மேற்சென்று செய்யப் படும் "


பேச்சு நின்று விக்க‌ல் மேல் நோக்கி வ‌ருவ‌த‌ற்கு முன்னே ந‌ல்ல‌ க‌ரும‌ங்க‌ள் செய்ய‌ப்ப‌ட‌வேண்டும்.

Lesson:

Never delay doing good things when you are active,
since by the time,
you think of starting,
you may not be.


" போற்று குருகிளைஙர் பொன்னசை யோர்க்கு இல்லை.
தோற்றுபசிக்கு இல்லை சுவைபாகம்... தேற்று கல்வி
நேசர்க்கு இல்லை சுகமும் நித்திரையும் காமுகர்தம்
ஆசைக்கு இலைபயம்மானம்
. "

பணத்தாசை கொண்ட உலோபியர்க்கு நல்ல ஆசிரியர், நல்ல உறவினர் கிடைப்பது அரிது.ப‌சி ப‌சி என‌ அலைப‌வ‌ருக்கு ந‌ல்ல‌ சுவை மிகுந்த‌ ச‌மைய‌ல் கிடைப்ப‌து அரிது.ந‌ல்ல‌ அறிவு பெற‌ விளைவோருக்கு உற‌க்க‌ம் கிடைப்ப‌து அரிது. க‌ல்வியில் சிற‌ந்து விள‌ங்க‌ முனைவோருக்கு ம‌ற்ற‌ இன்ப‌ங்க‌ள் கிடைப்ப‌துஅரிது.காமம் கொண்ட‌வ‌ர் ஆசைக்கு அவ‌மான‌ ப‌ய‌ம் இல்லை.


அதுவாகி அவனவளாய் எல்லாம் ஆகி

அடி நடுவு முடிவாகிய கண்ட மாகிப்

பொதுவாகிப் பல்லுயிர்கள் அனைத்துக்கெல்லாம்

புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி

மதுவாகி வ்ண்டாகி சுவையுமாகி

மலராகி மணமாகி மதிக்கவொண்ணா

அதுவாரும் அகாரமதே மூலமாகி

அண்டம் எல்லாத் தாங்கி நின்ற அம்மூலமே

அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது.. .தாயுமானவர்.

உபனிடதம் கூறுகிறது...அவன் அங்கு இருக்கிறான். இங்கு இருக்கிறான். தூரத்தில் இருக்கிறான். அருகிலும் இருக்கிறான். பெரிதிலும் பெரிதாக இருக்கிறான். சிறியதிலும் சிறியதாகவும் இருக்கிறான்.

பாரதி தனது பாட்டுக்களிலே கூறுவான்.

ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியுந்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் ..ஒன்றே ஆனாகிலுகனைதூம் சாரும்...அவை அன்றியோர் பொருளுமில்லை, அன்றி ஒன்றுமில்லை.

திருமூலர் கூறுவார்.

உண்ணும் மருந்தும் உலப்பு இலி காலமும்
பண் உறு கேள்வியும் பாடலுமய் நிற்க்கும்
விண் நின்று அமரர் விரும்பி அடி தொழ
எண் நின்று எழுத்து அன்சும் ஆகி நின்றானே.


ஆகவே எல்லாம் ஆகி எல்லாவற்றிலும் நிறைந்து பரவி பிரகாசித்து அருள் பொழிவது பராபரமே .

பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் கடவுளை இன்னார் என்று 28ம் சூத்திரத்தில் வர்ணனை செய்யப்படுவதைப் பார்ப்போம்.

"
ஸ ஏஷ பூர்வேஷாம் அபி குரு காலேனாவச் சேதாத்"

அதாவது, இறைவன் கால எல்லைக்குட்படாதவன். எல்லா குருமார்களுக்கும் அவனே குரு"

அவ்வாறு குருவாக் போற்ற்ப்படும் இறைவன் "தனக்கு உவமை இல்லாதான்" எனவும் "வேண்டுதல் வேண்டாமை இலான்" என திருவள்ளுவர் முதல் அதிகாரத்தில் (கடவுள் வாழ்த்து) குறிப்பிடுதல் காண்க. ‌

குயிற்பத்து என்னும் தில்லையில் அருளிய திருவாசகத்தில் ஒரு விருத்தம் :

"
கீதம் இனிய குயிலே
கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவின்
பாதாளம் ஏழினுக்கு அப்பால்
சோதி மணிமுடி சொல்லின்
சொல் இறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றும் இல்லான்
அந்தம் இலான் வரக்கூவாய்."


புலப்படுகிற பிரபஞ்சமாகவும் புலன்களுக்கு அப்பாற் பட்டவனாகவும் இருப்பவன் பரமன் ஒருவனே. அவனுக்கு அன்னியமாக ஒன்றுமில்லை.

இதே க‌ருத்தினை க்கொண்ட‌ உப‌னிஷ‌த் மந்திர‌ம் :

ய‌ஸ்மாத் ப‌ர‌ம் ந அப‌ர‌ம் கிந்சிது ய‌ஸ்மாது அனீயோர் ந‌ ஜ்யாய‌: அஸ்திவிருக்ஷ‌ இவ‌ ஸ்த‌ப்த‌; திவி திஷ்ட‌தி ஏக‌; தேன‌ இத‌ம் பூர்ண‌ம் புருஷேண‌ ஸ‌ர்வ‌ம்.( ம‌ஹா நாராய‌ணோப‌னிஷ‌த‌ம்...12 13)

யாரைக்காட்டிலும் மேலான‌தும் வேறான‌தும் ஏதும் இல்லையோ, யாரைக்காட்டிலும் நுண்ணிய‌தோ பெரிய‌தோ ஏதுவில்லையோ, அவ‌ர் த‌னிப்பொருள். விருக்ஷ‌ம் போன்று அவ‌ர் உறுதி பெற்ற‌வ‌ர். வான் ம‌கிமையில் அவ‌ர் நிலைத்து நிற்கிறார். அந்த‌ப்ப‌ர‌ம‌ புருஷ‌ணால் இவை யாவும் நிறைந்து இருக்கின்ற‌ன‌.

ஞான சம்பந்தர் கூறுவார்.
காதலாகிக் கசி‍‍ந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

நான்கு வேதங்கள் யாவும் உன்னைப்புகழும். எல்லாம் உன்னிடத்தில்இருந்து இயங்கும் தன்மையுடையன ஆகையால் மெய்ப்பொருளான உன்னை நாதன் எனவும் நமச்சிவாய எனவும் போற்றுகின்றன.

உன் திருவடிகள் மேல் நாட்டம் கொண்டேன். உன் பணி செய்யும் ஓதுவார் மத்தியிலே மனம் உருகி கண்ணீர் மல்க நமசிவாய நமசிவாய என உன் நாமத்தை ஜபிப்பதே என் உயிரின் மேலான கடமை என உணர்ந்தேன்

AkRQo G]lTÓúYôo JÝdLm RY\ôRYo Bqo.
GkSôÞm AYÚdùL] ùS±Ls Es[]..

§ÚUk§Wm áß¡\Õ.

AkRQo BúYôo AßùRô¯p éiÓú[ôo.

ARôYÕ ©\®ûV J¯dÏm ®û] ùNnRp úYiÓm.

AÕ Gu]?

ùNkRZp Km© ØlúTôÕm ¨VUm
ùNn Rm RY LÚUjÕ ¨uß
BeÏ ChÓfNk§Ùm K§f
NPeÏ AßlúTôoLú[.

êuß úYû[Ùm úYs®j¾ Y[ojÕ RUdÏ CPlThP Nk§Vô] YkR]eLû[jRY\ôÕ ùNnRp AY£Vm ©uú] Õ¬V ¨ûX«p ®[eÏYÕm úYiÓm

Õ¬V ¨ûXVôYÕ,,
,,
úYRj§u Ø¥Yô]Õ ET¨PRm.

ARu EiûUlùTôÚs..
..RjÕYU£...Guàm ùTÚ Yôd¡VUôm.

RjÕYU£ Gu\ôp AÕ ¿Vôn CÚd¡\ôn GuTRôm.

Rj ØRtùNôp.
jYm CWiPôm ùNôp
A£ êu\ôm ùNôp.

CkR 3 ùNôtLû[Ùm LPkR ¨ûX £Ym GuTRôm

AÕ úY\pX....¿úV.. G] EQWdá¥V ¨ûX.

CkR Yôd¡Vm NôUúYRj§p Es[Õ.

V_÷oúYRj§p Es[ ùTÚYôd¡Vm...Aam ©ÚmUôvª GuTRôÏm.
Sôu ©ÚmUUôL CÚd¡ú\u. GuTÕ CRu ùTôÚs.

Rôu Gut U] ¨ûXûVjÕ\kRYtdÏ R]d¡u± GÕÜm ùNnVôÕ GpXôm £qú] G] Gi¦«ÚlTYÚdÏ Cq®WiÓ Yôd¡VeL°u EhùTôÚs
®[eÏYÕ Nôj§VUôm.

ºYu úYß £Yu úYß ApX.

.Vôu ùVàm ¨ûX A¯ÙmúTôÕ EQWlTÓm ¨ûX
.ET¨PRm áß¡\Õ

...Aam N lÚmUô Au]m N lÚmUô úTôdRô N lÚmUô

..Rôu G] ¨û]VôÕ. R]dÏ úYiÓm G] ¨û]VôÕ, GpXô E«ûWÙm Ru E«o G] Gi¦, YZeÏúYôo U] ¨ûX Gu] ?

Sôu £Yu. Sôu CÓm Au]m £Yu. Sôu CÓm Au]jûR EiTYàm £Yú].

BLúY ºYu £Yú]ôÓ AjÕ®RUô¡ ¨u\úTôÕ ®û[Ùm úT¬uTjûRl úTNÜm CVÛúUô ?

பேசமுடியாது.  உணரவேண்டும்.  உண்மையான பக்தியோடு நெக்குருகி இறைவனைப் போற்றவேண்டும்.  அப்போது தான் பேரின்பம் நமக்குக் கிடைக்கும்.  அதுவரை நாம் பெறுவது சிற்றின்பமே.

No comments:

Post a Comment