Tuesday 28 August 2012

குணசீலம் - GUNASEELAM - Thala puraanam in Tamil and English

இன்று  வலைத்தளங்களில் சுற்றுலா போகலாம் என்று கிளம்பிய போது நேற்று பார்த்த வலைத்தளத்திலேயே புதிய தலைப்பில் பார்க்கலாம் என்று தோன்றியது.  அதிலே திருத்தலங்களைப் பற்றி தலபுராணம் என்ற தலைப்பில் பார்த்தேன்.  நான் மிகவும் விரும்பும் குணசீலம் பற்றி ஒரு அருமையான கட்டுரை இருந்தது.  கோயில் பற்றிய புகைப்படமும் இறைவனின் ஒரு அற்புதமான புகைப்படமும் இருந்தது.  கட்டுரை ஆங்கிலத்தில் உள்ளது.  நான் தமிழில் எழுத முயற்சி செய்கிறேன்.  தவறுகள் இருந்தால்  பொறுத்துக் கொள்ளவும்.  ஆங்கிலக் கட்டுரையையும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் படியுங்கள்.

திருமலைக்குச் சென்று அருள்மிகு மலையப்பர் என்று நமக்குத் தெரிந்த வேங்கடவனைக் கண்டு தொழுவதில் உள்ள இன்பம் எங்குமே கிடைக்காது.  கூட்ட நெரிசல் இருந்தாலும் இறைவனைத் தரிசித்தவுடன் நமக்குக் கிடைக்கும் உளமகிழ்ச்சி கணக்கில் அடங்காது.   சன்னதியை விட்டு வெளியே வர மனமே இருக்காது.  சரி குணசீலக் கதைக்கு வருவோம். 
            குணசீலம் என்னும் சிற்றூர் திருச்சி நகரிலிருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது.  இங்கு முன்னொரு காலத்தில் குணசீலர் என்னும் முனிவர் வாழ்ந்து வந்தார்.  அவரும் நம்மைப்போல திருமலைக்குச் சென்று விட்டு பிரிய மனமில்லாமல் திரும்பி வந்தார்.  அந்த முனிவர் வாழ்ந்த தவச்சாலை தான் இப்போது உள்ள குணசீலம் என அவரது பெயராலேயே அழைக்கப்படும் ஊர்.
            குணசீலர் திருமலைக்குச் சென்று இறைவனைத் தரிசித்தபின் தன்னுடன் வந்து தன்னுடைய தவச்சாலையில் வந்து நிரந்தரமாக இருக்க வேண்டும் என வேண்டினார்.  ஆனால் ஆண்டவனோ தான் கடன்பட்டிருப்பதாகவும் எனவே உடனடியாக வரமுடியாது எனவும் கடுமையான தவத்தை தவச்சாலையில் மேற்கொண்டால் காலக்கிரமத்தில் முனிவரின் விருப்பம் பலிக்கும் என்றும் கூறினார்.
            இறைவன் கூறியபடியே தனது தவச்சாலைக்குத் திரும்பிய குணசீலர் கடுமையான தவத்தை மேற்கொண்டார்.  கிருத யுகத்தில் ஒரு புரட்டாசி சனிக்கிழமையன்று மலையப்பர் குணசீலர் முன் தான்தோன்றியாகத் சுயம்புவாகத் தோன்றினார்.  மிக்க மகிழ்ச்சி அடைந்த குணசீலர் முறைப்படி பூசைகள் நடத்தி அந்த தான்தோன்றித் தெய்வத்தைத் தொழுது வந்தார்.  அப்போது அவருடைய குருநாதர் திருதல்ப்பியா Sreethalpya பத்ரிநாத் யாத்திரைக்குச் செல்ல விரும்பினார்.  தனது சீடரான குணசீலரைப் பிரிய குருநாதருக்கு மனமில்லை.  குணசீலருக்கும் இரண்டு பக்கமும் மனம் ஊசலாடியது.  என்ன முடிவெடுப்பது என்று திணறிய குணசீலர் முடிவைத் தன்னைத் தேடிவந்த வேங்கடவனிடமே விட்டு விட்டார்.  மன்க்குழப்பத்தில் முடிவெடுக்கும் பொறுப்பை அக்காலத்தில் இறைவனிடம் குணசீலர் விட்டுவிட்டதால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இன்றளவும் இங்குள்ள இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்தால் மனக்குழப்பம் தீரும் என்பது நம்பிக்கை.  இதே இப்போது பைத்தியத்தைத் தெளிய வைப்பதாகவும் சித்தசுவாதீனத்தைச் சரிசெய்வதாகவும் கூறப்படுகிறது.  
          இறைவனின் அனுமதி பெற்று குருநாதருடன் பத்திநாத் யாத்திரை சென்றார் குணசீலர்.  அப்படிச் செல்வதற்கு முன் ஒரு சிறுவனை பூசை செய்ய நியமித்துவிட்டுச் சென்றார்.  அந்த சிறுவனோ காட்டு விலங்குகளுக்கும் ஓசையுடன் சுழித்தோடும் காவிரியைக் கண்டும் அஞ்சி அவ்விடத்தை விட்டு அகன்று சென்று விட்டான்.  காலப்போக்கில் அந்தத் தான்தோன்றியின் மீது ஒரு புற்று வந்தது.
     பல ஆண்டுகள் கழித்து ஞானவர்மன் என்னும் மன்னன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.  அவன் குணசீலத்தில் ஒரு பசுமடத்தை நிறுவி பல பசுக்களை அங்கு வளர்த்து அங்கிருந்து கிடைக்கும் பாலை கோயில்களுக்கும் அரண்மனைக்கும் உபயோகித்தான்.  அப்படி இருக்கும் போது பாலின் அளவு படிப்படியாகக் குறைந்த மிகக் குறைந்த அளவிலேயே பசுமடத்திலிருந்து பால் கிடைத்தது.  ஆயர்க்ள் மன்னனிடம் தகவலைத் தெரிவித்தார்கள்.  மன்னனும் நேரில் வந்தான்.  ஆனால் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை.  அப்போது வயதான அந்தணன் ஒருவன் வந்து அங்கிருக்கும் புற்றின் மீது பால் அபிசேகம் செய்தால் புற்று கரைந்து இறைவனின் திருவுருவம் தெரியும் எனவும் பால் குறைவது நின்று விடும் எனவும் தெரிவித்தார்.  அதன்படி மன்னனும் செய்தார்.  புற்று கரைந்தது.  அழகிய வேங்கடவன் திருவுருவம் சங்கு சக்கரத்துடனும் சாட்டையுடனும் காட்சியளித்தது.  மன்னன் மிக மகிழ்ந்தான்.  அழகிய கோயில் ஒன்றை எழுப்பினான் மன்னன்.  பிரசன்ன வேங்கடவன் எனத் திருநாமமிட்டு அருமையான பூசைகளுக்கு ஏற்பாடு செய்தான்.
     இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் மனநலம் குன்றியவர்கள்  குணமடைகிறார்கள் என்பது தான்.  பூசை செய்யும் அந்தணர்கள் தீர்த்தத்தைத் தெளிக்கிறார்கள் மனநலம் குன்றியவர்கள் மீது.  இக்கோவிலில் வைகாசன முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன.  கோவிலின் சார்பில் பக்தர்கள் தங்க மூன்று சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன.  இங்கு தங்கி தினமும் இரு மறை தீர்த்தம் தெளிக்கப்பெற்று தொடர்ந்து ஒரு மண்டலம் தீர்த்தம் தெளிக்கப்பெற்றால் மனநோயாளிகள் குணமடைகிறார்கள் என்று சொல்லப்படுகிறது
               



Gunaseela left the Lord after appointing a small boy to take care of the vigraha and do the daily pujas. Unfortunately the small boy grew quite scared of the wild animals and the swirling waters of the Cauvery inspate, that he abandoned the Lord and ran away. In the flux of time on anthill grew over the vigraha of Venkatachalapathy and serpents lived in it. At that time one of the local kings Gnana Varman, who had his capital at Uraiyur, had established his cowshed near the present Gunaseelam. One day the cowherds noticed that the level of milk in the milk jugs had gone down mysteriously. The puzzled cowherds reported this to the king and he himself witnessed the mysterious disappearance of the milk. At that point an old Brahmin appeared and told the kind that if the anthill was dissolved with milk, the king could see the Lord himself. The anthill was dissolved with milk and Venkatachalapathy with a couch, discus, whip and sceptre was revealed. The Lord blessed the King who immediately took upon himself the job of constructing a temple. The Lord here is known as “Prasanna Venkatesa Perumal” and it is believed that those who are not able to visit Tirumala can obtain the grace of Venkatachalapathy here.

The experience of having darshan of Shri Venkateswara at Tirumala is unparalleled. Many a devotee feels so enraptured that it is a wrench to leave the Sanctum Sanctorum. One wishes that one could stay as long as one lives within the four walls housing the Lord. While ordinary mortals leave the shrine with a heavy heart and hope to return soon, ancient India had saints who had the faith to ask the Lord to leave Tirumala and go with them to their ashram! Astonishing! Yes but true. The story of Gunaseelar, an ancient rishi is engrossing.
Gunaseelam, a small hamlet, about 16 Kilometers away from Tiruchirapalli, on the Salem – Tiruchirapalli Road, is the site where the rishi performed penance. This brought none other than Lord Venkatachalapathy himself to the Banks of the Cauvery to reside in a place which came to be known by the very name of the saint. Saint Gunaseela was the disciple of Saint Sreethalpya. He was such an adept at serving his Guru that he was bestowed with all the superior knowledge that the Guru possessed. Once Gunaseelar went on a pilgrimage to the Seven Hills and had darshan of Lord Venkateswara. So moved was he that he pleaded with the Lord to go with him to his Ashram, as he felt that he could not stay away from Him anymore. The Lord who is ever moved by the true love of his devotees spoke to Gunaseelar and told him that as he was in a state of debt, he could not leave Tirumala. He directed Gunaseelar to return to his Ashram on the banks of the Cauvery and do penance. The Lord told the saint that none other than Vaikuntavasa Shri Narayana would appear.
Gunaseelar did as the Lord had directed and many years later in Krtha Yuga on Saturday in the month of Purattasi on the day of the star Sravana, Venkatachalapathy appeared in the Ashram of Gunaseelar as a Swayambhu. Gunaseelar was overjoyed and spent his days performing pujas to his Lord. At the time, his guru Sreethalpya wanted to go to Badrinath and perform penance. He however didn’t feel like parting from his dear disciple Gunaseela. Gunaseela could feel the desire of his Guru and also his dilemma. But he was himself in the horns of a dilemma: Whether to go with his Guru and in the process forsake his dear Lord who came to his abode or to forsake his Guru and stay with his Lord? The ever-compassionate Narayana was so moved at seeing the predicament of his devotee that when he prayed to Him to clear his mind and make him do the right thing, the Lord blessed his devotee and bade him to serve the guru. Since Venkatachalapathy cleared his mind, Gunaseela made a prayer that all those who pray to win at Gunaseelam should be rid of illusions and delusions and be blessed with clarity of mind. This is why there is a belief that praying at this temple is a cure to insanity and madness.
Gunaseela left the Lord after appointing a small boy to take care of the vigraha and do the daily pujas. Unfortunately the small boy grew quite scared of the wild animals and the swirling waters of the Cauvery inspate, that he abandoned the Lord and ran away. In the flux of time on anthill grew over the vigraha of Venkatachalapathy and serpents lived in it. At that time one of the local kings Gnana Varman, who had his capital at Uraiyur, had established his cowshed near the present Gunaseelam. One day the cowherds noticed that the level of milk in the milk jugs had gone down mysteriously. The puzzled cowherds reported this to the king and he himself witnessed the mysterious disappearance of the milk. At that point an old Brahmin appeared and told the kind that if the anthill was dissolved with milk, the king could see the Lord himself. The anthill was dissolved with milk and Venkatachalapathy with a couch, discus, whip and sceptre was revealed. The Lord blessed the King who immediately took upon himself the job of constructing a temple. The Lord here is known as “Prasanna Venkatesa Perumal” and it is believed that those who are not able to visit Tirumala can obtain the grace of Venkatachalapathy here.
The most important feature in this temple is the special grace that the lord bestows on the mentally unsound. The temple priests splash holy water on all the devotees, first on the mentally unsound, twice a day to cure them of their problems, and then on the others. The pujas are done here as per the Vaikanasa tradition. Devotees from Chennai can conveniently reach Tiruchirappalli by rail and take a direct bus to Gunaseelam. The temple has three ‘choultries’ and one for the mentally unsound to stay. It is believed that staying for 48 days and taking the “Theertham” twice a day will cure insanity. The beauty of the deity beckons one and all.

No comments:

Post a Comment